News November 26, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

நாகப்பட்டினம்: வங்கி வேலை அறிவிப்பு!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து டிச.,1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 28, 2025

நாகை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்..

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாகை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

நாகை: அழகிப் போட்டியில் திருநங்கை சாதனை

image

நாகூரைச் சேர்ந்த திருநங்கை ரஃபியா, சமீபத்தில் கம்போடியாவில் நடந்த சர்வதேச அழகிப் போட்டியில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 30 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், ரஃபியா மூன்றாமிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

error: Content is protected !!