News March 20, 2024
நாகை: மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

இந்திய பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு கடந்த 16.03.2024 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
திருமணத்தடையை நீக்கும் பெருமாள்

நாகையில் பிரசத்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 19வது திவ்ய தேசமாகும். திருமணமாகதவர்கள் இங்கு சென்று மூலவரான பெருமாளை பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். திருமணமாகிய பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் துளசி மாலை சாத்த பிரார்த்தனை நிறைவுறும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News April 2, 2025
நாகையில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், நாகையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
அகில இந்திய நுழைவு தேர்வுக்கு பயிற்சி – ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அகில இந்திய நுழைவு தேர்வில் (JEE Mains)கலந்து கொள்ள உணவு, தங்குமிடம் பயிற்சி கட்டணம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர் நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.