News September 27, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாகை கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால், அகில இந்திய தொழிற் தேர்வில் ஐடிஐ தனி தேர்வர்களாக கலந்து கொள்ள நாகை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. www.skilltraining.tn.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி தேதி (அக்.8) மேலும் விவரம் அறிய நாகை தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News February 6, 2026
நாகை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.
News February 6, 2026
நாகை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

நாகை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்<
News February 6, 2026
நாகை விவசாயிகளுக்கு ரூ.8.64 கோடி வரவு

நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 4ந்தேதி வரை 4990 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ 8 கோடியே 64 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


