News November 19, 2025

நாகை மாவட்டத்தில் 9.1 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாகையில் 2.9 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.8 செ.மீ, திருக்குவளை 0.9 செ.மீ, வேளாங்கண்ணி 0.6 செ.மீ, வேதாரண்யம் 0.1 செ.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9.1செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

நாகையில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட “வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு வருகிற மார்.13-க்குள் 60-65 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தை தொடர்புக் கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8760191630 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

நாகை: லாரியில் அடிபட்டு காவலர் உயிரிழப்பு

image

நாகை மாவட்டம் செம்போடை கிராமத்தைச சேர்ந்தவர் காவலர் விநாயகம். இவர் வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும் போது எதிரே வந்த லாரியில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News March 11, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!