News December 26, 2025
நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
நாகை: கடத்தல் காரர்கள் 4 பேர் அதிரடி கைது

நாகை அருகே காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கீழையூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 140 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற வேதாரண்யம் ரகுபாலன், தர்மபுரி முத்து, விமல்ராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து, கஞ்சா மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!


