News August 29, 2025
நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதா பிறந்த நாள் செப்.9ஆம் தேதி கொண்டாடப்படு உள்ளது. அன்றைய தினம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் செப்.20ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
Similar News
News August 29, 2025
நாகை: காலை உணவு திட்டத்தில் 23,119 மாணவர்கள் பயன்

நாகை மாவட்டத்தில் 351 அரசு பள்ளிகள் உள்ளன. இதேபோல 124 அரசு உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அமைந்துள்ள. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 475 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 23,119 மாணவர்கள் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
நாகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 28, 2025
நாகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04365-248121) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!