News September 24, 2025

நாகை: மாடு குறுக்கே வந்ததால் விபத்து!

image

காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் நேற்று நாகூருக்கு சொந்த வேலை காரணமாக சென்று விட்டு நாகைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது நாகூர் நாகை சாலையில் திடீரென்று சாலையின் நடுவே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது

Similar News

News September 24, 2025

நாகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22 ஆகிய வார்டு பகுதிகளுக்கான முகாம் நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு தேவர் சமுதாய கூடத்தில் நாளை 25ஆம் தேதி காலை நடைபெறுகிறது என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News September 24, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாகை கோட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை செப்.25ம் தேதி நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்,

News September 24, 2025

நாகை மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!