News January 14, 2026

நாகை: மயங்கி விழுந்த பள்ளி மாணவன் சாவு

image

பாலக்குறிச்சியை சேர்ந்த யுவராஜா மகன் தரணிகுமார் (17). தகட்டூர் அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த தரணிகுமார் நேற்று காலை வழக்கம்போல குளித்து விட்டு பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனை மருத்துவமனை அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

நாகை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

நாகை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>’இங்கே கிளிக்’ <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 26, 2026

நாகை: பூச்சி மருந்தை குடித்து தற்கொலை

image

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராமன். மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு, பல்வேறு உடல்நல கோளாறுகள் எழுந்துள்ளது. இதனால் விரகத்தியடைந்த ராமன் சம்பவத்தன்று, மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயனற்றுள்ளார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரணியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 26, 2026

நாகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

நாகை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!