News August 10, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காச்சோளம் உற்பத்தியைப் பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காச்சோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். SHARE IT NOW!

Similar News

News August 10, 2025

லைட்ஹவுஸ் பார்வை நேரம் மாற்றம்!

image

நாகை வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை லைட் ஹவுசில், தினமும் பார்வை பார்வை நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், அந்த நேரம் மாற்றப்பட்டு தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் இனி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை விடுமுறை என லைட் ஹவுஸ் நிர்வாகி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

நாளை நிறைவு பெறும் புத்தக கண்காட்சி

image

நாகையில் கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சி நாளை ஆக.11ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் காலை மாலை இருவேளையும் புத்தக கண்காட்சியுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த விழா நிறைவை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழா பேருரை நிகழ்த்தி பரிசுகள் வழங்குகிறார்.

News August 10, 2025

நாகை புத்தகத் திருவிழாவில் பழமையான கார் கண்காட்சி

image

நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நான்காவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று முதல் பழமையான கார் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. நாளை (ஆக.11) வரை நடைபெறும் இந்த கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த மகிழுந்துகள் இதில் இடம் பெற்றுள்ளன.

error: Content is protected !!