News August 9, 2025
நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
நாகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் இருந்து மட்டும் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
நாகை: கீழே கிடந்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த பெண்

நாகப்பட்டினம் சட்டையப்பர் மேலவீதி அருகில் கடந்த 18-ம் தேதி, ஒரு பவுன் தங்க தோடு தெருவில் கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற தபால் நிலைய ஊழியர் பவித்ரா என்பவர் அதனை கண்டெடுத்துளார். அதைத் தொடர்ந்து தங்க தோடினை நாகப்பட்டினம் டவுன் காவல்நிலையத்தில் நேர்மையுடன் பவித்திரா ஒப்படைத்தார். இதையடுத்து நகையின் உரிமையாளரை அடையாளம் கண்ட போலீசார் நேற்று அவரிடம் தங்க நகையை ஒப்படைத்தனர்.
News December 20, 2025
நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை

நாகை மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்குவளை, வலிவலம், தலைஞாயிறு, கீழையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


