News October 13, 2025
நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 189 மனுக்களை பெற்ற அவர், அவற்றுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Similar News
News October 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று(அக்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க
News October 13, 2025
கூட்டுறவு சங்க பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்

நாகை, வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் சாலையில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் குறைந்த விலை பட்டாசு விற்பனை கடையினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று மாலை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாத்திமா சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News October 13, 2025
நாகை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாகை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<