News August 5, 2025
நாகை மக்களே.. இந்த எண்ணை குறித்து வையுங்கள்!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News August 5, 2025
நாகை: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! Apply Now

நாகை மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <
News August 5, 2025
விநாயகர் சதுர்த்தி-ஆட்சியரின் கட்டுப்பாடுகள்

எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்தில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை பயன்படுத்தகூடாது. சிலைகளுக்கு ரசாயன வண்ணங்கள் பூசக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
News August 5, 2025
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.6) காலை10 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாகை, வெளிப்பாளையம், திருமருகல், கங்களாஞ்சேரி, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் ரோனிக் ராஜ் தெரிவித்துள்ளார்.