News September 24, 2025

நாகை: போஸ்டரால் பரபரப்பு

image

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நரிக்குட்டை என்று அழைக்கப்படும் சந்திர புஷ்கரணி தீர்த்த குளம் தனியார் வங்கி அருகில் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் குளத்தை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 24, 2025

நாகையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

image

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, திட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பளம், நிரந்தர பணி உறுதி, ஓய்வூதிய திட்டம், பணிநேர சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News September 24, 2025

நாகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22 ஆகிய வார்டு பகுதிகளுக்கான முகாம் நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு தேவர் சமுதாய கூடத்தில் நாளை 25ஆம் தேதி காலை நடைபெறுகிறது என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News September 24, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாகை கோட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை செப்.25ம் தேதி நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்,

error: Content is protected !!