News November 13, 2025
நாகை: பெண் தூக்கிட்டு தற்கொலை

நாகூர் அமிர்தா நகர் வண்ணா குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி நந்தினி (35). இருவரும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைபற்றி, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
நாகை: நடுரோட்டில் மது அருந்திய 2 பேர் கைது

நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகூர் நாகை மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால் பண்ணை சேரி மெயின் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக 2 நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் தமலேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
News November 13, 2025
நாகை: அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு

நாகை அருகே வடக்கு பொய்கைநல்–லூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலிச்சங்கிலி மாயமாகியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நாகை டவுன் போலீசாருக்கு தகவல் அழைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் சென்று வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News November 12, 2025
நாகையில் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கன் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும்பணியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


