News September 11, 2024

நாகை: புதிய உதவி செயற்பொறியாளர் பதவி ஏற்பு

image

நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் நீர்வளத்துறை‌ அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக ‌ரெ.சுப்ரமணியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பாசன பிரிவில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் பதவி உயர்வு அடைந்து நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் செயற்பொறியாளராக நேற்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்று கொண்ட சுப்பிரமணியனுக்கு கடைமடைப்பகுதி விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News August 20, 2025

நாகை: கழிவறை அமைக்க ரூ.12,000 மானியம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் மூலம் தனிநபர் இல்லங்களுக்கு இரு உறிஞ்சு குழி கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மானியமாக ரூ.12,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

உயர்வுக்கு படி வழிகாட்டல் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

image

நாகை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி ” என்ற உயர் கல்விக்கான வழிகாட்டல் முகாம் நாகை மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, வேதாரணியம் சார் ஆட்சியர் பங்கேற்றனர்.

News August 19, 2025

நாகை: தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

நாகை மக்களே.. வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!

error: Content is protected !!