News November 3, 2025

நாகை: பாதுகாப்பு பணிகள் தீவிரம் ‌

image

நாகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா இன்று காலை 11 மணிக்கு நாகூரிலுள்ள பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 3, 2025

நாகை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

BREAKING: நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது‌

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 35 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நாகை நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News November 3, 2025

நாகை: SIR சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பயிற்சி

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் SIR சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரண்யம் சார் ஆட்சியர் அமித் குப்தா கலந்து கொண்டு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விளக்கினார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!