News December 4, 2025
நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
நாகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

நாகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள்<
News December 4, 2025
நாகை: பெண் அரசு ஊழியரிடம் செயின் பறிப்பு

திருக்குவளை அடுத்த குண்டையூரை சேர்ந்தவர் ராதா (40). நாகை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணி செய்து வரும் இவர், சம்பவத்தன்று ராதா என்பவருடன் ஸ்கூட்டரில் மேலப்பிடாகையில் இருந்து திருக்குவளைக்கு சென்றுள்ளார். அப்போது மீனம்பநல்லூர் அருகே வேறொரு டூவீலரில் பின்னால் வந்த 3 நபர்கள் ராதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


