News June 25, 2024
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News August 20, 2025
நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க!<<17460435>> (2/2)<<>>
News August 20, 2025
நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
நாகை: கழிவறை அமைக்க ரூ.12,000 மானியம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் மூலம் தனிநபர் இல்லங்களுக்கு இரு உறிஞ்சு குழி கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மானியமாக ரூ.12,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.