News October 26, 2025

நாகை: தொடர் மழை- ஆட்சியர் அறிவிப்பு

image

நாகையில் மழை, வெள்ளம் ஏற்படும்போது பொதுமக்கள் வதந்திகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. மேலும் பயப்படாமல் உலர் உணவுகள், குடிநீர், ஆடைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் தீவனத்துடன் கால்நடைகள், வண்டிகள், விவசாய உபகரணங்கள் போன்றவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

நாகை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108098>>பாகம்-2<<>>)

News October 26, 2025

நாகை: ரூ.2.10 லட்சம் மானியம் பெற தகுதிகள் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News October 26, 2025

மாற்றத்திறனாளிகளுக்கான முகாம் மாற்றம்

image

நாகை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம், 2-வது செவ்வாய்க்கிழமை ஒரத்தூர் மருத்துவமனைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டு, இனி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 கட்டமாக நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!