News December 16, 2025

நாகை தேடி வரும் பாஸ்போர்ட் சேவை!

image

நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் வரும் டிசம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை பாஸ்போர்ட் சேவை வாகனம் நிறுத்தப்பட்டு, பாஸ்போர்ட் சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், கூடுதல் விவரங்களுக்கு நாகை தலைமை அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

image

நாகூர் – கொட்டாரகுடி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரகுடி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த நபரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெரிய கண்ணமங்களத்தை ராஜா (52) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News December 17, 2025

நாகை: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

வேதாரண்யம் நாலுவேதபதியை சேர்ந்தவர் மனோஜ் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (17) ஆகியோர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல வாஞ்சூர் ரவுண்டானா அருகே அரசு பஸ் ஒன்று மனோஜ் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ் படுகாயமடைந்தார். இதையடுத்து நாகூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் சண்முகம் (57) என்பரை கைது செய்தனர்.

News December 17, 2025

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இல்லாத பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2025-26-க்கான மஞ்சைப்பை விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு http://nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் ஜன.15-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!