News April 22, 2024
நாகை: தீயில் கருகி 27 ஆட்டுக் குட்டிகள் பலி

திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
Similar News
News February 12, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் சென்னையில் வழங்கபட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 3 மாத பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
நாகை அருகே 7 மாத கர்ப்பிணி தற்கொலை

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி சக்தி பிரியா (29). 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


