News March 1, 2026
நாகை: திருட்டு வழக்கில் 7 ஆண்டு சிறை

சங்கமங்கலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி30), கடந்த 2005-ம் ஆண்டு ஜெயலட்சுமியின் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின் பேரில் நாகை அடைக்கலராஜ் (55), அன்பழகன் (28), திருவெறும்பூரை சேர்ந்த பூசைமணி (28) இவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் அடைக்கலராஜ் இருந்துவிட்டார். மேலும் 2 பேருக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 7 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News March 3, 2026
நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
News March 3, 2026
நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 3, 2026
நாகை: திமுக சார்பில் விருப்பம் மனு தாக்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஷீதர் மற்றும் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில், நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. பாரிபாலன் விருப்பமனு அளித்தார்.


