News August 11, 2025

நாகை: டிகிரி போதும்! ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

Similar News

News August 11, 2025

நாகை போலீஸ் சூப்ரண்ட் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் கஞ்சா கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டு மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா, மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் எச்சரித்துள்ளார்.

News August 11, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பீல் காதொலிக் கருவி மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் இன்று வழங்கினார்.

News August 11, 2025

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

image

நாகை அவுரித்திடலில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெறவுள்ளது. இம்முகானது வருகிற (ஆக.13) அன்று நடைபெறுமென என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

error: Content is protected !!