News September 30, 2025
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் (வியாழக்கிழமை) அன்று நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் வேண்டும் என்றும், அன்றைய தினம் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
Similar News
News September 30, 2025
நாகையில் புகைப்பட போட்டி; ஆட்சியர் அழைப்பு!

நாகையில் அக்டோபர் 2 முதல் 8ஆம் தேதி வரை வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது. அதனியொட்டி, வனவிலங்கு புகைப்படம் போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், பங்கேற்க அவரது அதிகாரப்பூர்வ சமுகவலைதள பக்கத்தில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அக்டோபர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
நாகை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

நாகை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். SHARE பண்ணுங்க!
News September 30, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில 25-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க<