News March 22, 2025
நாகை சுகாதார துறையில் 28 காலிப் பணியிடங்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 28 தற்காலிக பணி இடங்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். வேலை தேடுபவர்களுக்கு இத்தகவலை SHARE செய்யவும்..
Similar News
News August 16, 2025
50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 172 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News August 15, 2025
நாகை: கடன் தொல்லை நீங்க இந்த கோயில் போங்க!

நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!