News January 5, 2026

நாகை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg என்று <<>>இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 8, 2026

புயல் சின்னம்: நாகைக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.8) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல வரும் ஜன.9-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2026

நாகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<> இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

image

நாகூர் – கங்களாஞ்சேரி சாலையில், நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது சின்ன கண்ணமங்களத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கொட்டாரக்குடியை சேர்ந்த சாய்குமார் (25) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக சாராய பாக்கெட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!