News November 10, 2025
நாகை: கோவில் குளத்தில் மூழ்கி பரிதாப பலி

வண்டலூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கீழ்வேளூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (55) என்பதும், விவசாயியான அவர் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது.
Similar News
News November 10, 2025
நாகை: விஏஓ கொலை; திருநங்கைகள் வாக்குமூலம்

நாகை செல்லூர் ஈசிஆர் சாலை அருகே விஏஓ ராஜாராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நிவேதா (20), ஸ்ரீகவி (19) எனும் இரண்டு திருநங்கைகளை நாகை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மது போதையில் இருந்த விஏஓ தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால், ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டுக் கொன்றுவிட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
நாகை: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <