News November 22, 2024
நாகை : கோடியக்கரையில் ஆட்சியர் ஆய்வு

வேதாரண்யம் வட்டம், கோடியக்கரை கடல்பகுதியில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில தினங்களாக விடாமல் பெய்த கனமழையினால் மழைநீர் வடியும் வடிகால் சரியான நிலையில் உள்ளதா என வடிகாலை நாகபட்டினம் மாவட்ட ஆட்சிதத்தலைவர் வடிகால் குழாய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Similar News
News December 14, 2025
நாகை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

நாகை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
நாகை: இலவச IRON BOX பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சலவை தொழிலாளிகள் திரவ பெட்ரோலியத்தால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளை (IRON BOX) பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்கம்பி உதவியாளர் பணிக்கான தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால், வரும் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04365-250129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


