News August 2, 2024
நாகை: காணாமல் போன சிறுமிகள் சென்னையில் மீட்பு

நாகை அன்னை சத்யா காப்பகத்தில் இருந்த 8 சிறுமிகளை காணாததால், புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 8 சிறுமிகளும் இன்று சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளிடம் விசாரித்த போது, காப்பக வார்டன் தங்களை தொடர்ந்து திட்டியதால் காப்பகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். இன்று மாலை சிறுமிகள் அனைவரும் நாகைக்கு மீண்டும் அழைத்து வரப்பட உள்ளனர்.
Similar News
News November 9, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இதனை மீறி உரிமம் பெறாமல் செயல்படும் மறுவாழ்வு மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
News November 9, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 8, 2025
நாகூரில் கந்தூரி முன்னேற்பாடுகள் அமைச்சர்கள் ஆய்வு

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469வது கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.


