News April 6, 2025
நாகை: கர்ம வினை தீர்க்கும் காயாரோகணேஸ்வரர்

நாகப்பட்டினத்தில் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சென்று மூலவரான காயாரோகணேஸ்வரரை வழிப்பட்டால் வாழ்வின் கர்ம வினைகள் என்று சொல்லக் கூடிய தற்போதைய மற்றும் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சஞ்சலங்களும் இன்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பது ஐதீகம். கர்ம வினைகள் நீங்குவதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News April 8, 2025
பழைய சாதம் நீர் அருந்த ஆட்சியர் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எழுமிச்சை வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்சி, பழைய சாதம் நீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
News April 8, 2025
தாட்கோ சார்பில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி, ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
வேண்டுடியதை நிறைவேற்றும் நெல்லுக்கடை மாரியம்மன்

நாகையில் உள்ள வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனுக்கு வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செலுத்துவதே இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் விதை நெல்லை வைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள அம்மனை வேண்டினால் கேட்டது கிடைக்கும், நித்தம் வாழ்வில் துணை வருவார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.