News December 17, 2025

நாகை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

குறைந்த வட்டியில் கடன்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

நாகை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in <<>>என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்

News December 22, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!