News March 3, 2026

நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

image

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

Similar News

News April 9, 2026

நாகை: வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் கௌதமன் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

News April 9, 2026

நாகை: ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்..!

image

வேதாரண்யம், கீழ்வேளூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வடமழையில் ரூ.52 ஆயிரம், அருந்தவப்புலத்தில் ரூ.52,400, ஆந்தக்குடி பாண்டவையாற்று பாலம் அருகே 60,650 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 8, 2026

நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!