News January 23, 2026

நாகை: கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பு!

image

நாகை மாவட்டத்தில் கடலில் மீன்வளத்தை பெருக்க ரூ.12 கோடி மதிப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை மீன்வளர்ச்சி கழக தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பணி நாகூர் மற்றும் சாம்பந்தான்பேட்டை கடலில் பகுதியில் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு 39 இடங்கில் நடைபெறுகிறது. இதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களின் நேரம் மற்றும் பணம் மிச்சமாகுமென கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News January 28, 2026

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

நாகை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.<<>>in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.’

News January 28, 2026

நாகை: வங்கி ஊழியர்கள் போராட்டம்

image

நாகை மாவட்டத்தில் 110 பொதுத்துறை வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில், வங்கி ஊழியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வாரத்திற்கு ஐந்து நாட்கள் பணி நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 28, 2026

நாகை: CPIM கட்சி பிரமுகர் பலி

image

வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டிரம்ப் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது CPIM கட்சியின் வேர்குடி கிளைச் செயலாளர் கல்யாணசுந்தரம் (45) உடலில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் ஏற்பட்டதில், ஒரத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 25-ம் தேதி உடல்நிலை மோசமடைந்து, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!