News October 14, 2025
நாகை: கடத்தலில் ஈடுபட்டவர் கைது

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இசிஆர் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீநாத் (41) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காரில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News October 14, 2025
நாகை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. பணியிடம்: தமிழ்நாடு
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 14, 2025
நாகை: ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் திறப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியா்கள், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுட்பட்டனர். இந்நிலையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பயிா் கடன், உரம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.
News October 14, 2025
நாகை: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!