News October 19, 2025
நாகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

நாகை மாவட்டத்தில் 18 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 19, 2025
நாகைக்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது
News October 19, 2025
நாகையில் சாலை மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 19, 2025
நாகை: சிக்கல் சிங்காரவேலவருக்கு கந்த சஷ்டி திருவிழா

நாகை மாவட்ட பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி கோயிலில், சிங்காரவேலருக்கு கந்த சஷ்டி திருவிழாவை வருகிற அக்.21ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான அக்.21ம் தேதி கணபதி ஹோமம் – வாஸ்து சாந்தியும் நடைப்பெற உள்ளது என செயல் அலுவலர் ப.மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.