News September 13, 2025
நாகை: உணவு சரியில்லையா? இதை பண்ணுங்க!

நாகை மக்களே, ஜூலை.1 முதல் உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘TN Food Safety Consumer App’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய நாகை மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
நாகை: விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

நாகையில் வரும் செப்.20-ந் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் மக்களை சந்தித்து பரப்புரை செய்ய நகராட்சியிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம், அவுரி திடலில் திமுக கூட்டம் நடைபெற இருப்பதால் அங்கு விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்து ?
News September 13, 2025
நாகை: 50% மானியத்தில் கிரைண்டர்

நாகை மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால், நாகை மாவட்ட சமூக நல அலுவரிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News September 13, 2025
நாகூர் விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாகூர் பெருமாள் குளம் மேல்கரை புளியந்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை (செப்.14) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நாளை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.