News February 24, 2026

நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில், Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News February 25, 2026

நாகை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? ஒரு CALL போதும்!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது – போலீஸ் அதிரடி

image

நாகை வெளிப்பாளையம், பீச் ரோடு பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ மற்றும் பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையெடுத்து, முகமது இப்ராஹிம்(45), செய்யதுயூசுப்(49) ஆகியோரை போலீசார் கைது செய்து, 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News February 25, 2026

நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 20 ஆயிரத்து 587 பேர் இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். எனவே விவசாயிகள் தங்களின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து அடையாள அட்டையை பெற்று பயன் பெறுமாறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க இன்று (பிப்.25) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!