News September 30, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று(செப்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 29, 2025

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 2025-2026ம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று(செப்.29) பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News September 29, 2025

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

image

நாகை மாவட்டம் நாகூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி பிரதமர் மோடி பதவி விலக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில், மாநில செயலாளர் நௌஷாத் முன்னிலை வகித்தார். மேலிட பார்வையாளர் கனிவண்ணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான கங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News September 29, 2025

நாகை: 210 மனுக்களுக்கு தீர்வு -ஆட்சியர் உத்தரவு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 210 மனுக்களை பெற்ற அவர், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!