News September 27, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
நாகை: இலவச ஓட்டுநர் பயிற்சி

நாகை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 2, 2026
நாகை: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) சார்பில் மஞ்சப்பை விருது பெற ஜன.15-க்குள், பிளாஸ்டிக் இல்லா நடைமுறைகளை பின்பற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3-ஆம் பரிசு 3 லட்சம் வழங்கப்படும் என மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 2, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான TANFINET இணையதள வசதி வழங்க தொழில் பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இதற்கான விண்ணப்ப பதிவு TANFINET என்ற இணையதள போர்டல் https://tanfinet.tn.gov.in மூலம் நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 14-க்குள் விருப்பமுள்ள பங்கீட்டாளர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர்அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


