News February 19, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 19, 2026
நாகை: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 19, 2026
நாகையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகை மாவட்டத்தில்EDII-TN இணைந்து FBDP (25-26 ) திட்டத்தின் கீழ் கீழையூர் & கீழ்வேளூர் வட்டார இளைஞர்களுக்கு சிறுதானியம் சார்ந்த பேக்கரி பொருள் தயாரித்தல் மேம்பட்ட மூலிகை பொருள் தயாரிப்பு , அழகு கலை, எம்பிராய்டரி, சணல் மதிப்பு கூட்டு பயிற்சி , ட்ரோன், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 6382436094 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News February 19, 2026
நாகை: இன்றே கடைசி நாள் – கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை மகளிர் திட்ட அலகிற்கு காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க 16-ந்தேதி கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்திட இன்று(பிப்.19) மாலை வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.


