News November 1, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (அக்.31) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
நாகைக்கு வருகை தரும் தமிழக ஆளுநர்

தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வருகிற நவ.3ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணன், ஐசிஏஆர் துணை இயக்குநர் ஜாய்கிருஷ்ணா ஜெனா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும் அரங்கில் கைப்பேசி, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
நாகை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

நாகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
நாகை: விவசாயிகள் வங்கி கணக்கில் 218 கோடி!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் குருவை நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை, 19,142 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 218 கோடியே 79 இலட்சத்து 7 ஆயிரத்து 89 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


