News October 31, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.30) இரவு 10 மணி முதல் இன்று(அக்.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

நாகை அரசு அலுவலகத்தில் பரபரப்பு

image

நாகை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டு கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஏற்கனவே சேதமடைந்த நிலையில் காட்சியளித்த இக்ககட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் நேற்று திடீரென பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தன. அப்போது மதிய உணவு இடைவேளை என்பதால் பணியாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 30, 2025

நாகை: இரவு காவலர் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு

image

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலிபணியிடமாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு இணையவழியாக விண்ணப்பித்தவர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கும், நாளை அக்.31ம் தேதி காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில், அனைத்து விண்ணப்பதாரர்களும் தவறாது பங்கேற்குமாறு ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

BREAKING: நாகையில் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி ரூ.1500 லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், இன்று கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் இடையூரைச் சேர்ந்த எஸ்.கே. ரமேஷிடம், அவரது சகோதரிக்கான புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க ரூ.1500 லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர்.

error: Content is protected !!