News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 6, 2026
சிறப்பு அலங்காரத்தில் எட்டுக்குடி முருகன்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும். விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
News January 6, 2026
நாகை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 6, 2026
நாகை: நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் இம்முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!


