News December 31, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 31, 2025

நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்

image

தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்றிரவு (டிச.30) அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த செல்வகுமார், சென்னை வடக்கு மண்டல பொருளதார குற்றபிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை போலீசார் நல உதவி ஐ.ஜியாக பணிபுரிந்த கே.எஸ்.பல்லா கிருஷ்ணன் நாகை எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News December 31, 2025

ரூ.1 லட்சம் பரிசு: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜன.20 ஆம் தேதி ஆகும். இதில், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்கு <>tnpcp.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!

News December 31, 2025

பயிற்சியாளர் தேவை: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், பயிற்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இசை, நடனம், நாடகம் என உங்கள் திறமைகளை 2 நிமிட வீடியோவாக எடுத்து, 90037 57531 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக அனுப்ப வேண்டும். கடைசி நாள் ஜன.7-ம் தேதி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!