News December 29, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 29, 2025

நாகை: பறவைகள் கணக்கெடுப்பு பணி

image

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் அரசு பள்ளி, வனக்கல்லூரி மாணவ மாணவிகள் என 60 பேர் 12 வழித்தடங்களில் ஈடுபட்டு உள்ளனர். சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியை
வன கோடியக்கரை சரக அலுவலர் ஜோசப் டேனியல் தொடங்கி வைத்தார்.

News December 29, 2025

நாகை அருகே ரயில் மோதி துடிதுடித்து பலி!

image

தேமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (36). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருக்கண்ணங்குடி ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல ஸ்டாலின் முயன்றார். அப்போது திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஸ்டாலின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2025

நாகை: தெரு நாய்களால் பறிபோன உயிர்!

image

திட்டச்சேரி பகுதி விவசாயிகள் நேற்று ஆடுகளை பள்ளி மைதானத்தில் மேய விட்டுள்ளனர். அப்போது வெயிலின் காரணமாக வீட்டுக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்க்கும் பொழுது அங்கு பல ஆடுகளின் தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு ஆடு செத்து கிடந்தது. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் தான் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. எனவே அப்பகுதி தெருநாய்களை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!