News February 24, 2026

நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<>mAadhaar<<>>” என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

நாகை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை நாகை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

நாகை: எம்எல்ஏ ஓ. எஸ். மணியன் தலைமையில் அலோசனை!

image

நாகை, கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் ஓ.எஸ். மணியன் MLA மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் விஜயேந்திரன் ஆகியோர் தலைமையில், இரு கட்சி நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். இதில், வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதன் பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.

News February 27, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்டவர் கைது – போலீசார் அதிரடி

image

நாகை மாவட்டம் திருக்குவளை‌‌ அருகே வாழக்கரை செல்லும் சந்திரநதி பாலம் அருகே கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருநாவுக்கரசு(41), என்பவர் காரில் 115 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை கடத்திய தெரிவந்தது. இதனையெடுத்து, போதை பொட்ருடகள் பறிமுதல் செய்த போலீசார், காருடன் திருநாவுக்கரசு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

error: Content is protected !!