News November 7, 2025
நாகை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News January 22, 2026
நாகையில் பிரபல ரவுடி கைது – போலீஸார் அதிரடி

நாகப்பட்டினம் நகர காவல் சரகத்தில் பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடி முனீஸ் (எ) முனீஸ்வரனை கைது செய்து, நாகை போலீசார் அதிரடி காட்டி உள்ளனர். புத்தூர் புதிய பாலம் அருகே கஞ்சா விற்பனைக்காக காத்திருந்தபோது, போலீசார் அவரை பிடித்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட முனீஸ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
News January 22, 2026
நாகை: விஷ பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு

வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கரை மில்லட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரதீபன் மகன் சாய் தீபன். 6ஆம் வகுப்பு படித்து வரும் சாய் தீபன், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷ பூச்சி கடித்து உள்ளது. இதற்காக வேதாரண்யம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


