News August 27, 2025
நாகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

நாகை மக்களே.. மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
Similar News
News August 27, 2025
நாகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணியில் மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற ஆக.29ம் தேதி தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு பண்ருட்டியில் இருந்து நாகைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஆக.29 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் காலை 9:32 மணிக்கு பண்ருட்டியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு நாகைக்கும், பின்னர் 1.20 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மாலை 4:45க்கு பண்ருட்டி சென்று சேரும்.
News August 27, 2025
வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை- ஆட்சியர்

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <