News December 28, 2025

நாகை: ஆட்டோ திருடியவர் கைது

image

நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, காலையில் வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆட்டோவை திருடிய லட்சுமாங்குடியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (41) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News December 29, 2025

நாகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

image

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 29, 2025

நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

நாகை: நாய்களுக்கு தடுப்பூசி

image

கீழ்வேளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில், பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!