News October 21, 2025
நாகை: அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

நாகை, குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மிஷன் வாசல்யா திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் 1 நிரப்பப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் உரிமைகள் துறையில் 2 ஆண்டு அனுபவத்துடன் 42 வயதிற்குட்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் விண்ணப்பிக்கலாம். மேலும் 04365 253018 தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
நாகை: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News October 21, 2025
நாகை: நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு!

நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகங்களில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 8ம் வகுப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள், கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மகாலட்சுமி நகர் நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு, அனுப்பிடலாம் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
நாகை மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!